Disqus Shortname

அன்னிய முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு துணை போகிறது உத்திரமேரூரில் அனைத்து வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வெள்ளையன் பேச்சு

உத்திரமேரூர் ஜன 07

உத்திரமேரூர் அனைத்து வியாபாரிகள் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்க ஆண்டு  விழா நேற்று நடந்தது. அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.ரமேஷ் தலைமை  தாங்கினார். கௌரவ தலைவர் சண்முகம் பொருளாளர் நந்தகிஷோர் ஆகியோர் முன்னிலை  வகித்தனர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர்  த.வெள்ளையன் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை  வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது – மத்திய அரசு கடந்த ஆண்டு இருதியில் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பெருமளவு
வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு ரூ.2000
நோட்டுக்களை பொது மக்களிடையே பெருமளவு புழக்கத்தில் விட்டது. இந்த
ரூ.2000 நோட்டுக்களால் வியாபாரிகள் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு மிகவும்
சிரமத்திற்குள்ளாகுகின்றனர். இதற்கான தீர்வு எட்டப்படாத நிலையில் மத்திய
அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் வர்த்தகத்தை  கொண்டுவந்துள்ளது. இதனால் கிராமப்புற சிறு குறு வியாபாரிகள் பெரிதும்  பாதிப்புக்களாவர். இந்தத்திட்டதால் அன்னிய முதலீட்டாளர்களே மத்திய அரசு   துணை போவதாக தெரிகிறது. எனவே உடனடியாக மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை  கைவிட்ட வேண்டும். சில்லரை தட்டுப்பாட்டை போக்க அனைத்து வங்கிகளிலும் புதிய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அதிகளவு புழக்கத்தில் விட வேண்டும்.

என்றார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன்,
இன்பெக்டர் ரமேஷ், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments