Disqus Shortname

திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்காக நன்றி தெரிவித்து தீர்மானம்

உத்திரமேரூர் ஜன, 07
 உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் சாலவாக்கம் ஒன்றிய திமுக
நிர்வாகிகளுக்கான செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமை தாங்கினார்.
ஒன்றிய அவைத் தலைவர் ரவி, வர்த்தக அணி நிர்வாகி ஐ.பாபு, தமிழ்வேந்தன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் பெ.மணி, முரளி அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான க.சுந்தர் கலந்து கொண்டு  நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில்  மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்காக நன்றி தெரிவித்து  தீர்மானம் நிரைவேற்றப்பட்டது, மேலும் அனைத்து பகுதிகளிலும் உள்ள திமுக  தொண்டர்கள் பெங்கல் தினத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாட பொது மக்களுக்கு  இனிப்புகள் வழங்கியும், கழக கொடியினை ஏற்றியும் சிறப்பாக கொண்டாட  வேண்டும், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து இடங்களில்  அமோக வெற்றி பெற நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றிட வேண்டும், புதிய  வாக்காளர்களை கழகத்தில் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மகளிரணி நிர்வாகிகள் திவ்யாபரமேஸ்வரி, ஆரியமாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments