Disqus Shortname

மேனல்லூர் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் டிவ, 08
உத்திரமேரூர் அடுத்த மேனல்லூர் கிராமத்தில் நேற்று வருவாய் திட்ட முகாம்
நடைபெற்றது. வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு
திட்ட அலுவலர் அகிலாதேவி முன்னிலை வகித்தார். துணை வட்டாட்சியர் லோகநாதன்
அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் குடும்ப அட்டையில் பெயர்
சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண
உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 74
மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 24 மனுக்கள் உடனடி
தீர்வு காணப்பட்டது, 42 மனுக்கள் நிலுவை உள்ளது, 08 மனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டது. முகாமிற்கு உத்திரமேரூர் எம்.எல்.ஏ .க.சுந்தர்
கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை  வழங்கி
சிறப்புரையாற்றினார். வருவாய் அலுவலர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள்
உட்பட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்..

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.