Disqus Shortname

உத்திரமேரூரில் சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

உத்திரமேரூர் ஜன, 27

உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் மின் மாரத்தான் போட்டி நடந்தது.
உத்திரமேரூர் நல்ல தண்ணீர் குளக்கரையில் துவங்கிய மாரத்தான் போட்டி
குளக்கரையை சுற்றியும், முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலக  வளாகத்தில் முடிந்தது. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்கள்  சுகாதார விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து பொது  மக்களுக்கு விழிப்புணர்வு ஏறப்படுத்தினர். இப்போட்டியினை பேரூராட்சி  செயல் அலுவலர் கேசவன் துவக்கி வைத்தார். வட்டாட்சியர் சாந்தி முன்னிலை  வகித்தனர். நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி ஊழியர்கள் சிறப்பாக  செய்திருந்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.