Disqus Shortname

முன்னாள் எம்.எல்.ஏ ஒரக்காட்டுப்பேட்டை பால பணியினை ஆய்வு செய்தார்

உத்திரமேரூர்  ஜீலை 06:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரக்காட்டுபேட்டை கிராமத்தை சுற்றிலும், காவித்தண்டலம், களியப்பேட்டை, திருவானைக்கோவில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமவாசிகள், ஒரக்காட்டுபேட்டை பாலாற்றுப் படுகை வழியாக இருசக்கர வாகனங்களின் மூலம், 6 கி.மீ., தூரத்தில் உள்ள செங்கல்பட்டு சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் பாலாற்றின் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், சிதண்டி, மெய்யூர் வழியாக 15 கி.மீ., தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், ஒரக்காட்டுபேட்டை - ஆத்தூர் இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டுமென, இப்பகுதிவாசிகள் தொடந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில் இப்பகுதி பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட, அம்மாவின் அரசில் சிறப்பு திட்ட நிதியில் இருந்து, 24 கோடி ரூபாய் கடந்த 2013ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தற்போது பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இப்பணியினை காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர். பாலப்பணி ஒப்பந்ததாரர்கள் இன்னும் ஒரிரு மாதங்களில் பணிகள் நிறைவடைந்துவிடும் எனத் தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது சேர்மென் கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, தண்டரை தணிகைவேல், அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments