Disqus Shortname

காஞ்சி மாவட்ட வேளாண் விழிப்புணர்வு சங்க 3 ஆம் ஆண்டு துவக்க விழா

உத்தரமேரூர் ஜீலை, 21
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கத்தின் 3 ஆம் ஆண்டு துவக்க  விழா வியாழக்கிழமையன்று விமரிசையாகநடைபெற்றதுநிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் விழிப்புணர்வு சங்கத் தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமைதாங்கினார்மாவட்ட செயலாளர் சின்னாலம்பாடி என்.ரவி, மாவட்ட பொருளாளர் இரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் க.மாயகிருஷ்ணன்மாவட்ட அமைப்பாளர் மு.பரசுராமன்மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர்மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்றார்.சட்ட ஆலோகசர் ஏ.சந்தானகிருஷ்ணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி துரை.கலியரத்தினம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மைதுணை இயக்குநர் (வேளாண் மற்றும் வணிகம்.சந்துரு கலந்து கொண்டு பசுந்தாள் விதையினை குறித்து விளக்க கூறி 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ பசுந்தாள் விதைகளை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கினார். நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவரின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், புதுச்சேரி பாரா ஒலிம்பிக்கமிட்டியின் தலைவர் தெ.நா.சந்தோஷ்குமார், உதவி வேளாண்மை இயக்குனர் இரா.கிருஷ்ணவேணி ஆகியோர் இயற்கை வழி நடவு பற்றியும்இயற்க்கை முறையில் பயிர்கள் வளர்ப்பது குறித்தும்பயிர்கள் வளர்ச்சிக்கு உதவியாக உள்ள இயற்கைஉரங்களான பஞ்ச கவ்யாஅமுத கரசல்பூச்சு விரட்டி குறித்தும் விளக்கி கூறினார்மேலும் இயற்க்கை விவசாயத்தால்ஏற்படும் நன்மைகள் மற்றும் செயற்கை விவசாயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவசாயிகள் விளக்கிக் கூறினர்.நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் பாலாற்று படுகை விவசாய சங்கத் தலைவர் எம்.மணி, முரளிமோகன், மாவட்ட துணை அமைப்பாளர் கோ.எல்லப்பன், சட்ட ஆலோசகர் து.கண்ணபிரான், தனஞ்செழியன், தவனகிரி, மனோகரன், சுப்புராயன் உட்பட பல விவசாயிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் விவசாயி மோகன்யாதவ் நன்றி கூறினார்.

No comments