Disqus Shortname

சுற்று சூழல் விழிப்புணர்வு முகாம்

உத்திரமேரூர் ஜீலை, 24
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் கம்மாளம்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவியர்களும் சுற்று சூழல் விழிப்புணர்வு முகாம் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணராஜ், ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். சர்வோ அறக்கட்டளை நிர்வாகி கலைச்செல்வி முன்னிலை வகித்தார். குழந்தைகள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் து.ராஜ் கலந்து கொண்டு பருவ நிலை மாற்றம், புவி வெப்பமாதல், கடல் நீர் மட்டம் உயருதல், வனங்கள், ஆறுகள், மலைகள் அழிவதால் ஏற்படும் பாதிப்புக்கள்,  சுற்று சூழல் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள், மரம் வளர்த்தலால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளிகளின் வளாகங்களில் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டு பலன் தரும் 2000 மரக்கன்றுகள்  மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் இராஜேந்திரன், தன்னார்வளர் ஸ்டெல்லா, யசோதா உட்பட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments