Disqus Shortname

உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் பாரபட்சம் அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்

உத்திரமேரூர் ஜீலை.21

உத்திரமேரூர் பஜார் வீதியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பேருந்து
நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு
நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரூந்துகள் வந்து செல்கின்றன.
மேலும் சென்னையிலிருந்து வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு
செல்லும் கனரக வாகனங்களும் இந்த சாலை வழியே செல்கிறனர். இச்சாலையில்
வியாபாரிகள் போக்குவரத்திற்கு  இடையூறாக கடைகள் வைத்து ஆக்கிரப்பு
செய்துள்ளதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல்
அவ்வப்போது பேக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் மக்கள்
அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று
நெடுஞ்சாலைதுறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு  பொதுமக்கள் வெகு
நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் கடந்த வருடம்
செப்டம்பர் மாதம் உத்திரமேரூர் பஜார் வீதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற
நெடுஞ்சாலைதுறை சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன்பின் நெடுஞ்சாலை ஊழியர்கள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை அளவிட்டு
குறியிட்டுச் சென்றனர். அவ்வமையம் கன மழை துவங்கிய காரணத்தால்
ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அகற்ற
முற்ப்பட்ட போது சட்ட மன்ற தேர்தல் நெருங்கிய காரணத்தால் தள்ளி
வைக்கப்பட்டது. அதன்பின் கடந்த மாதம் 20ம் தேதி வியாபாரிகளுக்கு
ஆக்கிரமிப்பை அகற்ற மீண்டும் நோட்டீஸ் அனுப்பட்டு வியாபாரிகளிடம்
கையொப்பமும் பெற்றுக்கொண்டனர். அதில் பல வியாபாரிகள்
தாங்களாகவே முன்வந்து தங்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை அகற்றிவிட்டனர். மீத முள்ள
ஆக்கிரமிப்புக்களை 28ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறையினர் ஜே,சி.பி மூலம் அகற்றினர். இதில் ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் மட்டும் தங்களது இடம் சாலை வரை உள்ளது நெடுஞ்சாலைத்துறை அளவிட்டுருந்த அளவு தவறானது என்று கூறி
ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்தனர். அதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அளவிடாமல் தற்போதைய கிராமக்கணக்கின் படி சர்வேயர் மூலம் ஆக்கிரமிப்பாளர் இடத்தை மட்டும் அளந்து அவர்கள் இடம் சரியாக உள்ளதாக  வாய்மொழியாக கூறி ஆக்கிரமிப்பை அகற்றாமல் சென்று விட்டனர். இதனால் அந்த
ஆக்கிரமிப்புள்ள இடங்கள் மட்டும் சாலை குறுகலாக காணப்படுகிறது. இது
குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில் எங்களது கடைகளை மட்டும்
குறியிட்டிருந்த அளவு வரை அகற்றிய அதிகாரிகள் மற்ற ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை. அப்போது அங்கு மட்டும் நெடுஞ்சாலைதுறை அளவு தவறா அவ்வாறு தவறு எனில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் எங்கே போனது என்று பல்வேறு தரப்பில் கேள்வி ஏழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றாதிருக்க பல்வேறு இடங்களில் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் கையூட்டு வாங்கி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இது மட்டுமின்றி ஆக்கிரமிப்பை அகற்றியபின் சாலை ஓரங்களில்  கழிவு நீர் கால்வாய் கட்டும் பணியும் தற்போது நடந்து வருகிறது மிகவும் மந்தமாக நடக்கும் இப்பணியும் முறையாக நடைபெறவில்லை. 5 அடி நீளமும் 5 அடி ஆழமும் கொண்டதாக துவங்கப்பட்ட இந்த கால்வாய்பணி ஒரு சில இடங்களில் 3 அடி
நீளமாகவும், 2 அடி அகளமாகவும் குறைந்து கொண்டு வருகிறது. மேலும்
ஆங்காங்கே கால்வாய்களில் வளைவுகளும் உள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் கால்வாய்களில் எவ்வாறு கழிவு நீர் வெளியேறும் என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கால்வாய் அமைக்கும் பணிக்காக பழைய கால்வாய்களை தூர்த்துவிட்டமையால் மந்தமாக நடக்கும் புதிய கால்வாய் பணியால் சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வியாபாரம் செய்ய வழியின்றி மிகவும்
சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் கடந்த முன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. கழிவு நீருடன் மழை நீரும் கலந்து செல்ல
வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் பெருகி
நோய்பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம்
நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை பழைய வருவாய்துறை கிராம கணக்கின் படி அளவீடு செய்து முறையாக மீட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் அனைத்துவகை ஆக்கிரமிப்புக்களை பாரபட்சமின்றி அகற்றி வளைவுகள் இல்லாத முறையான கழிவுநீர் கால்வாய்களை போர்கால அடிப்படையில் செய்து முடித்துத் தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments