Disqus Shortname

ஆதவப்பாக்கத்தில் ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா

உத்திரமேரூர் ஜீலை. 23
உத்திரமேரூர் அடுத்த ஆதவப்பாக்கம் கிராமத்தில் உள்ள சுமார் 500 ஆண்டு
பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீஎல்லையம்மன் கோவில் இக்கோவிலில் நேற்று
கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மதியம்  கோவில் வாளாகத்தில் பக்தர்கள் ஊரணிப் பொங்கலிட்டும் வேப்பிளைஆடை அணிந்தும், காப்பு கட்டி விரதமிருந்த நூற்றுக்கும்மேற்பட்ட பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், வாகனங்களை இழுத்தும், உடல்முழுக்க பழங்கள் குத்தியவாரும் வீதியுலா வந்து நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். பின்னர் ஊர் பொது மக்கள் கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஎல்லையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்கு ஆதவப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments