Disqus Shortname

திருப்புலிவனம் திரிசூலக்காளியம்மன்32-ம் ஆண்டு தீமிதி திருவிழா

உத்திரமேரூர் ஜீலை,18
 உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ
திரிசூலக்காளியம்மன் ஆலய 32-ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று
வெகுவிமர்சையாக நடைபெற்றது. தீமிதித் திருவிழாவை முன்னிட்டு காலை உலக நன்மைக்காக வேண்டி 1001 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர்
விரதமிருந்த பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலை சுற்றி அம்மனை வழிபட்டும் கோவில் வளாகத்தில் பொங்களிட்டும் அவர் அவர்கள்
நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல்
நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் 250 பேருக்கு சீருடைகள், நேட்டுபுத்தகங்கள் மற்றும் 200 முதியவர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட  நலத்திட்டங்களை வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்து  கொண்டு வழங்கினார். மாலை விரதமிருந்த  108 பக்தர்கள் குளக்கரையில் காப்பு  கட்டியபின் வீதியுலா வந்து தீமிதித்து அம்மனை வழிபட்டனர். பின் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இவ்விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் ஸ்ரீதிரிசூலக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி
ஜி.காளிதாஸ், கௌரவத்தலைவர் ராதாகிருஷ்ணன், விழாக்குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்கு திருப்புலிவனம்
மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments