Disqus Shortname

வாடாநல்லூரில் மருத்துவ முகாம்

உத்திரமேரூர் ஜீலை,24
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வாடாநல்லூர் கிராமத்தில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருததுவமனை, ஆராய்ச்சி நிலையம், உத்திரமேரூர் சோழா அரிமா சங்கம் மற்றும் எம்.எம்.சி பார்மா கியூடிகல் லிமிடட் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் நடத்தியது. முகாமில் அத்தியூர் மீனாட்சி மருத்துவ மைய மருத்துவர் டாக்டர்.சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மருததுவர் அபிராமிவடிவேல், அரிமா சங்க தலைவர் பாலபுகழேந்தி, ஸ்டெல்லா, ரோசிலின், சோழா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவ பதிவேடு அதிகாரி வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். முகாமினை டாக்டர் பக்தா ரெட்டி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முகாமிற்கு வாடாநல்லூர், நல்லூர், அ.பி.சத்திரம், பருத்திக்கொள்ளை, பட்டஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 619 பேர் சிகிச்சை பெற்றனர். இம்முாகமில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை உட்பட பல்வேறு வகைகளில் சிகிச்சை அளித்து தேவையானவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 16 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.  மருத்துவர்கள் சுப்பிரமணி, பக்தாரெட்டி, முகமது மொஹிதின், அபிராமிவடிவேல் மற்றும் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் பொது மக்களுக்கு சிறப்பான சிகிச்சையளித்தனர். நிகழ்ச்சியில் லயன் சங்க செயலாளர் தீபக்ராம், பெருளாளர் பில்கி, மீனாட்சி மருததுவக்கல்லூரி ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments