Disqus Shortname

பங்களாமேடு பேருந்து நிழற்குடை சீரமைக்க கோரிக்கை


உத்திரமேரூர் நவ20
உத்திரமேரூர் அடுத்த பங்களாமேடு பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட
மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம்,
தமிழ்நாடு நுகர் பொருள் சேமிப்பு கிடங்கு மற்றும் வேளாண் வணிகத் துறை
விற்பனைக் கூடம் ஆகியவை உள்ளது. இங்கு உள்ள சேமிப்பு கிடங்கிற்கும்
விற்பனை கூடத்திற்கும் நாள் தோரும் விவசாயிகள் ஏராளமானோர் வந்து
செல்கின்றனர். நெடுஞ்சாலை துறை அலுவலக உழியர்கள் உட்பட பலர் வந்து
செல்கின்றனர். இங்கு பேருந்து நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை சுமார்
12 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு தனியார் பேரூந்துகள்
மற்றும் ஒருசில அரசு பேரூந்துகள் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் இந்த
நிழற்குடையானது சரிவர பராமறிக்கப்படவில்லை. எனவே இந்த நிழற்குடை தற்போது
செடி கொடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அங்கு
ஏராளமான விஷ பூச்சிக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள கிராம பகுதிக்கு
செல்வதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த பேரூந்து நிழற்குடையை
சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு சீரமைத்து
தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments