Disqus Shortname

கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை உத்திரமேரூர் மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர் நவம்பர்7 :
 உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஒரு 108 ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. இந்த ஆம்புலன்ஸ் வாரத்தில் சில நாட்களில் பராமரிப்பு பணிகள், டிரைவர் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சரிவர இயங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அவசரத்திற்கு பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மிக முக்கியமாக விபத்தில் சிக்கியவர்கள், கர்ப்பிணிகள் அவசரத்திற்கு போன் செய்தால் மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருகிறது. கால தாமதமாக வரும் 108 வாகனத்தால் விபத்துக்குள்ளானவர்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments