Disqus Shortname

ஓங்கூரில் பாதையில்லாத சுடுகாட்டின் அவலநிலை

உத்திரமேரூர் நவ,18

உத்திரமேரூர் பேரூராட்சி 10-வது வார்டிற்குட்பட்டது ஓங்கூர் கிராமம்.
இந்த கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த
கிராம மக்களுக்கென சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது.
இந்த பகுதியில் உள்ள அனைவரும் இந்த சுடுகாட்டையே பயன்படுத்தி
வருகின்றனர். இந்நிலையில் இந்த சுடுகாட்டுக்கு எரிமேடை, சுற்றுசுவர்,
பாதைவசதி ஏதுவும் கிடையாது, சுடுகாட்டிற்கு சொந்தமான நிலங்களை பல்வேறு தரப்பினர் முற்கள் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால்
சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படும் சடலங்கள் எடுத்து செல்ல பாதையின்றி பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் 4கி.மீ தூரம் சென்று பட்டா நிலம் வழியாக கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் பல்வேறு தரப்பினருடன் தகராறுகள் ஏற்படுகின்றது. ஒவ்வொரு முறையும் சுடுகாட்டிற்கு செல்லும் போது சண்டைகள் ஏற்பட்டு தான் வருகின்றது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு இதுநாள் வரை காணப்படவில்லை. மேலும் சுடுகாட்டை சுற்றியுள்ள நிலங்கள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் தற்போது பெய்தமழையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார்ரளித்தும இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே ஓங்கூர் பகுதி சுடுகாட்டிற்கு உண்டான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி மதில்சுவர் எழுப்பி சாலை வசதி செய்து தருமாறு பொது
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments