Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பாதியில் நிற்கும் பள்ளி கட்டிட பணியை முடிக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்நவ,18:
உத்திரமேரூர் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இது 1955ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக கடந்த 2006-2007ம் கல்வி ஆண்டில் அனைவருக் கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.4.3 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணி 2007ல் துவங்கி முழுமை பெறாமல் உள்ளது. இதனால் தற்போது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை தனியார் ஒப்பந்ததாரர் கட்டியதாக கூறப்படுகிறது. கட்டிடத்தை முழுமையாக கட்டியதாக கூறி முழு தொகையையும் அரசாங்கத்திடம் பெற்றதாவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கலெக்டர், எம்எல்ஏ ஆகியோரிடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், கட்டிடத்தை முழுமையாக கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், மாணவ, மாணவிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments