Disqus Shortname

மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

உத்திரமேரூர் மே, 25
 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மணித்தோட்டம், குண்ணவாக்கம் பகுதிகளில் உள்ள சர்வசேவா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 10 ம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் வழி பள்ளிகளில் காட்டுக்கொல்லை உயர்நிலை பள்ளியில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மணித்தோட்டத்தில் மாணவி ஆர்.திவ்யா 500 க்கு 494 மதிப்பெண்களும், குண்ணவாக்கத்தில் ஆர்.ராகுல் மாணவர் 500 க்கு 465 மதிப்பெண்களும் பெற்று முதலிடத்தை பெற்றனர். காட்டுக்கொல்லை உயர்நிலைப் பள்ளியில் என்.கமலி என்ற மாணவி 500க்கு 472 மதிப்பெண்களும் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர். பள்ளி தாளாளர் எஸ்.முனீஸ்வரன் மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் வி.சந்தானம் உட்பட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களை வெகுவாக பாராட்டினர்.  

மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.  இதிலும் உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சிப் அடைந்து 100 சதவீதம் வெற்றிப் பெற்றனர்.  இதில் பள்ளி மாணவி எஸ்.திராவிடகவி 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், வி.விஷ்ணுபிரியா  480 மதிப்பெண்கள் பெற்று 2 வது இடத்தையும், ஜெ.ஆகாஷ் என்ற மாணவன் 479 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.  மேலும், 31 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் இதேப் போல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடபிரிவுகளில் மட்டும் தலா 6 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து இந்தமுறையும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியின் தாளாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன், கோமதிராதாகிருஷ்ணன், ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களை வாழ்த்தி பாராட்டினர். பள்ளி முதல்வர் ஆா்.சேகா், ஆசிரிய, ஆசிரியர்கள் அனைத்து மாணவ மாணவியியரையும் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

No comments