Disqus Shortname

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக உத்திரமேரூர் தொகுதியில் 81.81 சதவீத வாக்கு பதிவு நடந்தது.

உத்திரமேரூர் மே, 16
சட்டசபை தேர்தலில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 71.16 சதவீத வாக்குக  பதிவாகி உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தர்.
வாக்குப்பதிவு தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

மின்னணு எந்திரங்களுக்கு சீல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். பின்னர் அவை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அனுப்பி வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறையை பூட்டி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த அறையின் முன்பு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் இடங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதிவான வாக்கு சதவீதம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குப்பதிவு சதவீதம் வருமாறு:–
உத்திரமேரூர்–81.81
மதுராந்தகம்–80.67
திருப்போரூர்–78.45
ஸ்ரீபெரும்புதூர்–76.72
காஞ்சீபுரம்–74.5
செங்கல்பட்டு–66.85
செய்யூர்–66.85
தாம்பரம்–62.36
பல்லாவரம்–61.35
ஆலந்தூர்–61.15
சோழிங்கநல்லூர்–59.17
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 71.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக உத்திரமேரூர் தொகுதியில் 81.81 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 59.17 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கஜலட்சுமி தெரிவித்தார்.

No comments