Disqus Shortname

உத்தரமேரூர் அரசு பெண்கள் பள்ளி 95.2 சதவீதத் தேர்ச்சி

 உத்திரமேரூா் மே, 18 
 
பிளஸ் 2 தேர்வில் உத்தரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 95.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப் பள்ளியில் முதன் மூன்று இடங்களை மாணவிகள் எஸ்.சவிதா 1,087, கே.ஜீவா 1,087, வி.சிவசங்கரி 1,077 மதிப்பெண்களுடன் பெற்றுள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 95.2 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டி இனிப்புகள் வழங்கினர். இதே பள்ளி மாணவி காவியா கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

  மானாம்பதி பள்ளி 96 சதவீதம்: 

 உத்தரமேரூர் வட்டம் மானாம்பதி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களை ஏ.தனலட்சுமி 1134, ஜெனிபர் 1091, வி.தமிழரசன் 1071 ஆகியோர் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் எஸ்.டி.சண்முகம், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  தொடர்ந்து 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.  இதிலும் உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் வி,ராமசாமி, 1154 மதிப்பெண்களும், வி.லலிதா 1080 மதிப்பெண்களும்,  எம்.அபிநயா 1069 மதிப்பெண்களும் பெற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். பள்ளியில் 10 மாணவர்கள் 1000திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மீனாட்சி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து இந்தமுறையும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற உத்திரமேரூர் வட்டத்தில் முதல் மதிப்புகள் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் தாளாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன், கோமதிராதாகிருஷ்ணன், ஆகியோர் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களை வாழ்த்தி பாராட்டினர். பள்ளி முதல்வர் ஆா்.சேகா், ஆசிரிய, ஆசிரியர்கள் அனைத்து மாணவ மாணவியியரையும் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

No comments