Disqus Shortname

நகைக்கடை உடைத்து ஒன்றரை கிலோ நகை, 15 கிலோ வெள்ளி, ரூ5 லட்சம் பணம் கொள்ளை உத்திரமேரூரில் பரபரப்பு

உத்தரமேரூர் ஏப்ரல், 30
உத்திரமேரூரில் நகைக்கடை உடைத்து ஒன்றரை கிலோ நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கபணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூரை சேர்ந்தவர் ரவி (45). அதே பகுதியில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். அட்சய திருதியை முன்னிட்டு கடந்த வாரம் ஒன்றரை கிலோ தங்கம் வாங்கி கடையில் வைத்திருந்தார்.நேற்றிரவு வழக்கம் போல வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு ஷட்டரும் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்தார்.

பதற்றத்துடன் உள்ளே சென்றார். நகைகள் வைத்திருந்த லாக்கரும் உடைக்கப்பட்டு ஒன்றரை கிலோ நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் அடகு வைத்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிந்தது.இது குறித்து உத்திரமேரூர் போலீசில் ரவி புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் போலீசார் விரைந்தனர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி, நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உத்திரமேரூரில் டாக்டர் முருகன் என்பவரது வீட்டை உடைத்து 25 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை போன சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments