Disqus Shortname

ஸ்ரீ.ராதாகிருஷ்ணா கோவில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூர் ஏப்,07

உத்தரமேரூர் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ.ராதாருக்மணி சமேத ஸ்ரீ.ராதாகிருஷ்ணா திருக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.  விஷேச பூஜைகள் புற்றுமண் கொணர்தல் சங்கல்பம், வாஸ்து ஹோமம், புண்யாவசனம், பகவத் பிரார்த்தனை, முளைவிடுதல், திருமஞ்சனம், கலசம் பிரதிஷ்டை ஹோமங்கள், முதல் கால பூர்ணாஹீதி, சயணாதிவாசம் பிரசாதம் விநியோகம் கோபூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, புண்யாவனம், இரண்டாம் கால ஹோமம் முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இரவு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாமல்லபுரம் அச்சகர் எம்.டி.ரவிச்சந்திரன் பட்டாச்சாரி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.