Disqus Shortname

தேர்தலுக்கு பின் பா.ம.க. ,தே.மு.தி.க கட்சிகள் முடிவுக்கு வந்து விடும் பண்ருட்டி இராமச்சந்திரன் பேச்சு

உத்தரமேரூர் ஏப்,15
உத்தரமேரூர் பஸ் நிலையத்தில் காஞ்சி (தனி) நாடாளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கு.மரகதம்குமரவேலுக்கு இரட்டை இலைசின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டம் திங்கட்கிழமையன்று நடந்தது. அ.தி.மு.க காஞ்சி மேற்கு  மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்.ஏவுமான  வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சி எம்.எல்.ஏ.வி.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.  உத்தரமேரூர் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு வரவேற்றனர். பண்ருட்டி இராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது. 1982 ஆம் ஆண்டு கடலூரில் புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர் தலைமையில் ஜெயலலிதாவை பெண்ணின் பெருமை போற்றி விழா நடந்தது. பாராளுமன்ற ராஜ்யசபை எம்.பி.யாக ஜெயலலிதாவை டெல்லிக்கு அனுப்பிவைத்தோம் மோடியை விட அரசியல் அனுபவம் பெற்றவர் ஜெயலலிதா பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ம.கட்சி, தே.மு.தி.க கட்சி இரண்டும் முடிவுக்கு வந்து ஓரம் கட்டப்படுவது நிச்சயம் 543 எம்.பி.க்களில் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலில் தி.மு.கவினர் செய்தது  உலகம் முழவதும் பரவி விட்டது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி கூட இப்பேர் பட்ட ஊழல் செய்ததில்லை தி.மு.க வில் இருந்து மு.க.அழகிரியை கருணாநிதி நீக்கி விட்டார். அழகிரி தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க டெப்பாசிட் கூட வாங்காமல் தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் முதல்வராக வில்லையா அதேபோல் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க ஜெயித்து விட்டால் தமிழக முதல்வர் ஜெயலலிதான், பாரத பிரதமர்  என்று கூறி வரும் தேர்தலில்  அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கு.மரகதம் குமரவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டுகிறேன் என்று பேசினார் பண்ருட்டியார் இவ்விழாவில் சேர்மென்   ஆர்.கமலக்கண்ணன், துணை சேர்மென் அ.ரவிசங்கர் வாலாஜாபாத்  சேர்மென் என்.எம்.வரதராஜிலு, தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழநி, அ.தி.மு.க ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை, உட்பட பலர் பங்கேற்றனர். பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன் நன்றி கூறினார்.

No comments