Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நினைவுப் பரிசு நீதிபதி வழங்கினார்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பேரூராட்சியில் தூய்மை பணியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில்
துப்புறவு பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் பசுமை
நண்பர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும்
தினந்தோரும் உத்திரமேரூர் பேரூராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வீதியெங்கும் சென்று
குப்பைகள் சேகரிப்பது மட்டுமின்றி அவற்றை தரம்பிரித்து மக்கும் குப்பையினை
உரம் தயாரிக்கவும், மக்கா குப்பையினை மறு சுழற்சிக்காகவும் அனுப்பிவிடுகின்றனர்.
மேலும் வீடு வீடாக சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமலிருக்க
அறிவுரைகள் அளித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகின்றனர். இந்நிலையில் சிறப்பாக பணியாற்றி வரும் துப்புறவு பணியாளர்கள்
மற்றும் பசுமை நண்பர்களுக்கு உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல்
நடுவர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார்.
அப்போது உங்களது சேவையால் உத்திரமேரூர் பேரூராட்சியே தூய்மையாக
உள்ளதாகவும், சேவையினை தொடர்ந்து சிறப்பாக செய்திட வேண்டும் என்றார்.
மேலும் பேரூராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலக ஊழியர்களுக்கும்
நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது பேரூராட்சி செயல் அலுவலர்
கேசவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments