Disqus Shortname

உத்திரமேரூரில் நடந்த மாற்றுதிறனாளிகள் குறைதீர்க்கும் முகாமில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர்
உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான
குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் மாவட்ட சார்
ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டாட்சியர்
அகிலாதேவி, சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் கீதாலட்சுமி,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். முகாமில் உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு
கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு மூன்று
சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கை, கால், ஊன்றுகோல்கள்,
காது கேட்டும் கருவிகள், செயற்கைக் கால்கள், மோட்டார் பொருத்தப்பட்ட
வாகனங்கள், மாதாந்திர ஓய்வூதியம், வங்கி கடன்கள் உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இதில் 84 மாற்றுத்
திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தபட்ட துறை
அலுவலர்களுக்கு விசாரணைக்காக அனுப்பபட்டது. நிகழ்ச்சியின் போது
மாவட்ட சார் ஆட்சியர் சரவணன் சக்கர நாற்காலி 2 நபர்கள்,
ஊன்றுகோல்கள் 2 நபர்கள், காது கேட்கும் கருவி 2 நபர்கள் என மொத்தம் 6
மாற்றுதிறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக உதவியாளர் பிரபாகரன்
மற்றும் அரசுதுறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments