Disqus Shortname

உத்திரமேரூர் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிப்பு விவசாயிகளிடம் குறை கேட்பு

உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் எட்டு வழிச்சாலை எதிர்ப்புஇயக்கம் சார்பில் எட்டு வழிச்சாலை பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் மற்றும்பொது மக்களிடம் தொடர்ந்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக நேற்று கன்னிக்குளம், புத்தளி, புலிவாய், மலையாங்குளம்,அருங்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கநிர்வாகிகள் சௌந்தர், முத்துக்குமார் ஆகியோர் எட்டு வழிச்சாலையால்பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களின்குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பல்வேறுஆலோசனைகள் வழங்கினர். அப்போது அங்கு வந்த சாலவாக்கம் போலீசார் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் சௌந்தர், முத்துக்குமாரை விசாரணைக்காககாவல் நிலையத்திற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தினர். அதற்கு எட்டுவழிச்சாலை இயக்க நிர்வாகிகள் எந்த ஒரு புகாரும் இல்லாத நிலையில் எங்களை
காவல் நிலையத்திற்கு அழைப்பதற்கான காரணத்தினை கூறுங்கள் என்றனர்.
இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக்கண்ட கிராமமக்கள் அங்கு கூடியதால் போலீசார் அங்கிருந்து புரப்பட்டனர். இச்சம்பவத்தால்அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் இது குறித்து கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்சார்பில் விவசாயிகளை நேரில் சந்தித்து பாதிக்கப்படும் விவசாயிகளின் குறைகளைகேட்டறிந்து பாதிக்கபடவுள்ள நிலங்களை பார்வையிட்டு வருகிறோம். பாதிப்புகள்குறித்து அரசுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். மேலும்தமிழக அரசு எட்டு வழிசாலையில் பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவரும் எட்டு
வழிச்சாலைக்கு ஆட்சேபனை உள்ளவர்கள் 21 நாட்களுக்குள் தங்களது
ஆட்சேபனையினை தெரியப்படுத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பாதிக்கப்படும் விவசாயிகளிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். இந்நிலையில் நாங்கள் எங்கு சென்றாலும் உளவுத்துறை உள்ளிட்டபோலீசார் எங்களை தொடர்ந்து குறிவைத்து எங்கள் பின்னால் சுற்றி திரிவதுடன்எங்களை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று
அருங்குன்றம் கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போதுஅங்கு வந்த போலீசார் எங்களை அழைத்து செல்ல முற்பட்டனர். அப்போது கிராமமக்கள் சூழவே போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு போலீசார்தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனினும் எங்கள் பணி தொடரும்


என்றார்.

No comments