Disqus Shortname

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் (பங்க்) மாயம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்அம்மா குடிநீர் திட்டத்தில் கீழ் உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனைகட்டுப்பாட்டில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் (பங்க்) வைக்கப்பட்டுகுடிநீர் கேன் விற்பனை துவங்கப்பட்டது. கேன் ஒன்று ரூ.10 க்கு விற்கப்படும் குடிநீர் விற்பனை நிலையத்தில் (பங்கில்) விற்பனையாளராகஉத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் பணியாற்றிவந்தனர். இந்த குடிநீர் விற்பனை நிலையம் பஸ் நிலையத்தில் உள்ளதால்பஜார் வீதிக்கு வரும் பொது மக்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்பயணிகள் என பல்வேறு தரப்பினர் இந்த விற்பனை நிலையத்தில் குடிநீர்கேனை வாங்கி சென்று வந்தனர். இந்த குடிநீர் விற்பனை நிலையம் மிகவும்பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1 மாதமாக விற்பனைநிலையமானது அங்கிருந்து அகற்றப்பட்டது. எந்த அறிவிப்பும் இன்றி இந்தகுடிநீர் விற்பனை நிலையம் அகற்றப்பட்டதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் கேன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது. மேலும் தொலைதூரம் செல்லும் பயணிகள் இந்த அம்மா
குடிநீர் இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட
நிர்வாகம் இந்த குடிநீர் விற்பனை நிலையத்தினை மீண்டும் திறந்திட
வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments