Disqus Shortname

மேல்தூளி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நீதிபதி பங்கேற்ப்பு

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த மேல்தூளி கிராமத்தில் வட்ட சட்ட பணிகள் குழு
மற்றும் சர்வோ டிரஸ்ட் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
நேற்று நடந்தது. கூட்டத்தில் சர்வோ டிரஸ்ட் நிர்வாகி கலைச்செல்வி
தலைமை தாங்கினார். உத்திரமேரூர் காவல் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்,
வழக்கறிஞர்கள் கருணாநிதி, கண்ணபிரான், ஆர்த்தி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். வட்ட சட்ட பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர்
கயல்விழி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் உத்திரமேரூர் வட்ட
சட்ட பணிகள் குழுத் தலைவரும், உத்திரமேரூர் உரிமையியல் மற்றும்
குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான சச்சிதானந்தம் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார். இதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர்
பாதிப்பு, கால்நடைகள் பாதிப்பு, மனிதர்களுக்கு கேன்சர் போன்ற நோய்களுக்கு
ஆலாவது போன்ற பல்வேறு தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பயன்பாடினை தடுக்க நமது
கடமைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் பொது
மக்களுக்கு சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை நாடி வட்ட சட்ட
பணிகள் குழு மூலம் இலவசமாக தீர்வு காணும் முறைகள் குறித்தும்
விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் கிராம மக்கள் சட்டரீதியான பல்வேறு
பிரச்சனைகள் குறித்த மனுக்களை நீதிபதியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில்
தன்னார்வலர்கள் ஜெயந்தி, ஸ்டெல்லா, வழக்கறிஞர்கள் உட்பட கிராம
மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments