Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

காஞ்சிபுரம் ஏப் .25
 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் நீதிமன்றம் உத்தரவை அடுத்து 85 சதவீத கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 100 சதவீதம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில், தற்போது பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்கள் வி.ஏ.ஓ. தாசில்தார் உட்பட அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் அகற்றும் பணி நடைப்பெற்று வருகின்றது. இதுவரை நிலத்தடி நீரை அதிகமாக உறிஞம் கருவேல மரங்கள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 85 சதவிகித மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் உத்தரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் உள்ள கருவேல மரங்கள் 100 சதவிகம் அகற்றப்பட்டுவிடும். என்று உத்தரமேரூர் செயல் அலுவலர் கேசவன் தெரிவித்தார். மேலும் பேரூராட்சிக்குட்பட்ட குளம் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளும், பேரூராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து  செயல்பட்டு   வருகிறது. இதனால் உத்திரமேரூர் பேரூராட்சியில் வருங்காலங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது என்று கூறினார்.

No comments