Disqus Shortname

உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி உத்திரமேரூரில் டாஸ்மாக் கடைகள் திறப்பு முற்றுகையிட்ட மாதர் சங்கம்

உத்திரமேரூர் ஏப், 02

உத்திரமேரூர் வந்தவாசி மாநில நெடுஞ்சாலை சாலையில் உத்திரமேரூர் பேரூந்து  நிலையம் அருகே பார்வெளி சந்து உள்ளது. இங்கு அரசு
டாஸ்மாக் கடை அருகருகே இரண்டு கடைகள் உள்ளது. இந்த 2 டாஸ்மாக் கடைகளுக்கு  அருகில் தனியார் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் 20  மீட்டர் தொலைவில் குடவோலை முறைக்கு பெயர் பெற்ற கல்வெட்டுக் கோவிலான  வைகுண்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த டாஸ்மாக் மற்றும் அருகில்  இயங்கி வரும் பார்களும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் இடையூராக இருந்து வருகிறது. மேலும்
பாரில் மதுப்பிரியர்களால் ஏற்படும் பல்வேறு இன்னல்களால் பக்தர்கள்,
மாணவ-மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் பெரிதும்   இன்னலுக்குள்ளாகின்றனர்.  இது குறித்து பொது மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இந்நிலையில் உச்சநீதி மன்றம்  நெடுஞ்சாலைக்கு அருகில் இயங்கும் கடைகள் அகற்ற வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உத்திரமேரூர் சுற்றியுள்ள  திருப்புலிவனம், மானாம்பதி, கட்டியாம்பந்தல் உள்ளிட்ட இடங்களில் கடைகள்  அகற்றப்பட்ட போது உத்திரமேரூர் வந்தவாசி மாநில நெடுஞ்சாலைக்கு அருகே  உத்திரமேரூர் பார்வெளிச் சந்தில் பக்தர்கள், மாணவர்கள், பொது மக்களுக்கு  இடையூராக டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. உச்ச நீதி மன்ற  தீர்ப்பை அவமதிக்கும் விதமாக டாஸ்மாக் கடையினை திறந்ததை கண்டித்து மாதர்
சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி   டாஸ்மாக் கடையை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில்
ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில்
போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான  போலீசார் குவிக்கப்பட்டனர்.

No comments