Disqus Shortname

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொடர் ஆர்பாட்டம் நடத்த முடிவு

உத்திரமேரூர் ஏப், 11
 காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு  ஆதரவாகவும் விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்காத மத்திய, மாநில அரசுகளை  கண்டித்தும் வரும் 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தொடர் ஆர்பாட்டம்  நடத்த போவதாக உத்திரமேரூரில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.   டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14 ஆம்  தேதி முதல் விவசாயம் செய்த பயிர்கள் கருகியதால் சுமார் 300 விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டும், ஏக்கத்திலும் உயிரிழந்தனர், இந்த ஆண்டு போதிய  மழைபொழிவு இல்லாததாலும் தமிழகத்துகான காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு  மறுப்பதாலும் தமிழக விவசாயிகள்வேதனை அடைந்துள்ளனர், தேசிய வங்கிகளில்  விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், முறையான வறட்சி  நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயித்துக்கு தேவையான தண்ணீரை வழங்க  ஏற்பாடுகள் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம்  நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த  மாதம் 14ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் எலிக்கறி சாப்பிடுவது,  தூக்குப்போட்டுக்கொள்வது போல் கழுத்தில் கயிறுடன் நின்றல், மொட்டை  அடித்துகொள்வது, அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என பல்வேறு நூதனமான  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்த போராட்டங்கள் ஒரு  மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு மத்திய மற்றும் மாநில  அரசுகள் எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம்  இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கம், அனைத்து பயிர்கள் சாகுபடி சங்கம்,
பாலாறு படுகை விவசாயிகள் சங்கம், ஒருங்கிணைந்து விவசாயிகள் சங்கம்
உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று
நடந்த செயற்குழுக் கூட்டத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக  விவசாயிகளின் போராட்டத்திற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை  கண்டித்து வரும், 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை உத்திரமேரூர்,  மதுராந்தகம்,  செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், செய்யூர், வாலாஜாபாத்,  காஞ்சிபுரம்  உள்ளிட்ட பகுதிகளில் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கத்  தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். பாலாறு படுகை விவசாயிகள்  சங்க தலைவர் பூதூர் மணி, சிறப்புத் தலைவர் கிருஷ்ணன், அனைத்து பயிர்கள் சாகுபடி சங்க தலைவர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments