Disqus Shortname

உத்திரமேரூரில் பா.ம.க சார்பில் டாஸ்மாக் கடை பூட்டு போடும் பேராட்டம்

உத்திரமேரூர் ஏப்,05

உத்திரமேரூர் வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் உத்திரமேரூர் பஸ் நிலையம்  அருகே பார்வெளி சந்தில் அடுத்தடுத்து 2 அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் அருகே பிரசித்த பெற்ற கல்வெட்டு
கோவிலும், அரசு மகளிர் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளது. இதனால்  இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்  மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து  வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1  முதல் நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்ட
போதிலும் உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் மாநில நெடுஞ்சாலையிலிருந்து
சுமார் 50 மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை
அவமதிக்கும் வகையில் இந்த டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. மேலும் பொது  மக்கள் மற்றும் மாணவ-மாணவியர்களுக்கு இடையூராக உள்ள இந்த டாஸ்மாக் கடைகளை  அகற்றக் கோரி நேற்று பா.ம.க சார்பில் பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், மாநில துணைப் பொது செயலாளர் கெங்காதரன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொது மக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட முயன்றனர். அப்போது
உத்திரமேரூர் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர். மேலும் காஞ்சி மாவட்ட அரசு டாஸ்மாக் கடை பொருப்பாளரிடம்
தொலைபேசியில் தொடர்பு கொண்டதில் இந்த கடைகளை மூட உடனடி நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த  போராட்டத்தை யொட்டி 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகள்  போராட்டக்காரர்களின் கண்துடைப்பிற்காக மூடிவைக்கப்பட்டது. பின்னர்  போராட்டகாரர்கள் கலைந்து சென்ற பின் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கியது.

No comments