Disqus Shortname

உத்திரமேரூர் அருகே நெல்லி கிராமத்தில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையினை பொது மக்கள் சூறையாடினர்.

ஜூலை 03. 2017

சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலை அருகே உள்ள மதுபானக்கடைகளை கடந்த
ஏப்ரல் மாதம் முதல் மூட உத்தரவிட்டது. இதனையடுத்து சாலையோரம் இருந்த
பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இருந்தாலும், அவற்றை
கிராமப்பகுதிகளில் புதிதாக தொடங்குவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி
வருகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிப்பு தெரிவித்து வந்தாலும்
கூட தமிழக அரசு தொடர்ந்து கடைகளை திறக்கவே ஆர்வம் காட்டிவருகிறது.
அதனடிப்படையில் உத்திரமேரூர் அடுத்த நெல்லி கிராமத்தில் வனப்பகுதி அருகே
அதிமுக உறுப்பினர் சேகர் என்பவரின் இடத்தில் நேற்று மதியம் சுமார் 2
மணியளவில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. பொது மக்களுக்கு இடையூராக
திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி பொதுமக்கள் கடையினை
முற்றுகையிட்டனர். இருந்த போதிலும் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து
வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்
நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை உள்ளே புகுந்து மது பாட்டில்களை
உடைத்து டாஸ்மாக் கடையினை சூறையாடினர். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார்
சம்பவ இடத்திற்கு விரைந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் – எங்கள் பகுதியினை சுற்றி 10
திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் புராதான சாலையாக
கருதப்படும் இந்த சாலையின் அருகே இந்த டாஸ்மாக் கடை அமைப்பது. பொது
மக்கள் மற்றும் பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பெரிதும்
இடையூராக இருக்கும். மேலும் இதன் அருகே உள்ள வனப்பகுதியில் குடிமகன்களால்
பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்கள் பகுதியில்
டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால்
போராட்டம் வலுப்பெரும் என்றனர்.

No comments