Disqus Shortname

ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்.ஏப்ரல்,02
உத்திரமேரூரில் அடுத்த அ.பி.சத்திரம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த
கோவில் ஸ்ரீவலம்புரி விநாயகர் திருக் கோவில் இக்கோவில் சில ஆண்டுகளுக்கு
முன் சிதலமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் புணரமைக்கும் பணி
துவங்கப்பட்டு 6 மாதங்களாக நடந்தது. புணரமைக்கும் பணியானது. அன்மையில்
முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக
நடைப்பெற்றது. கும்பாபிஷேகதை யொட்டி கடந்த 2 நாட்களும் கணபதிபூஜை,
வாஸ்துசாந்தி, அஷ்டதிக்குபூஜை, முதல்காலபூஜை, கலசபூஜை, ஹோமம்,
நவக்கிரஹபூஜை, துர்கைபூஜை, துவாரபூஜைகள் போன்ற பல்வேறு பூஜைகள்
நடைப்பெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை  முடிந்த பின் நங்கையர்குளத்திலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு
கலசத்தின் மீது ஊற்ற பின் பக்தர்களுக்கு தெளிக்க கும்பாபிஷேகம் வெகு
விமரிசையாக நடைப்பெற்றது.  கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம்  அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் பொது  மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்கு  உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இரவு அலங்கரிக்கப்பட்ட வலம்புரி  விநாயகர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு  காட்சியளித்தார்

No comments