Disqus Shortname

பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்


உத்திரமேரூர் ஏப், 15
 உத்திரமேரூரில் கடந்த 1-ஆம் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு
இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. முடிய டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக
கிராமப்புற பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு
வழிமுறைகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் அடுத்த  கட்டியாம்பந்தல் கூட்ரோடில் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக்  கடை மூடப்பட்டது. இதற்காக அருகில் உள்ள தளவராம்பூண்டி கிராம சாலையில்  புதியதாக டாஸ்மாக் கடை கட்டும் பணியானது துவங்கி நடந்து வந்தது. இதனை  எதிர்த்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர்  உத்திரமேரூர் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வாரம் சாலை  மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடந்த வந்த  உத்திரமேரூர் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான ஆண் காவலர்கள் சாலை மறியலில்
ஈடுபட்ட பெண்களை அத்துமீறி அகற்றினர். இதில் கர்பிணிப் பெண் உட்பட
குழந்தைகள் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதேப் போல்
திருப்பூரில் டாஸ்மாக் கடையினை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்களை
அடித்த காவல்துறை அதிகாரி பாண்டியராஜனை கண்டித்தும் உத்திரமேரூர் பஸ்  நிலையத்தில் மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும்  இணைந்து பெண்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய காவலர்களை கண்டித்து  நேற்று ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் மாதர் சங்க வட்ட செயலாளர்  ஜெயந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட தலைவர் உமேஷ் ஆகியோர் தலைமை  தாங்கினர். நிர்வாகிகள் பிரியா, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரமிளா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியில் அத்துமீறி பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை கண்டித்து கோஷங்கள்  எழுப்பப்பட்டது. கூட்டத்தில் மாதர் சங்க நிர்வாகிகள், வாலிபர் சங்க  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அத்துமீறி பெண்மீது தாக்குதல்  நடத்திய காவலர்லள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

No comments