Disqus Shortname

மாவட்டக்குழு உறுப்பினர் பதவி அ.தி.மு.க., வேட்பாளர்கள் மனு

உத்திரமேரூர் செப், 27
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் உத்திரமேரூர் ஒன்றிய 20, மற்றும் 21 வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 27 மாவட்ட உறுப்பினர் வார்டு உள்ளன. அதில் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உத்திரமேரூரை சுற்றியுள்ள 38 ஊராட்சிகள் உள்ளடக்கி 21 வார்டும் , சாலவாக்கத்தை சுற்றியும் 35 ஊராட்சிகள் உள்ளடக்கி 20 வார்டும் உள்ளது, அதிமுக சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 20 வது வார்டில் அஞ்சலிதேவிதணிகைவேல், 21 வது வார்டில் அருணாவில்வபதி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். உடன் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு, நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, அண்ணாமலை தண்டரைதணிகைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.