Disqus Shortname

உத்திரமேரூர் எம்.ஜி.ஆர் நகர் தரைப்பாலம் பழுது பொது மக்கள் அவதி

உத்திரமேரூர், செப், 19

உத்திரமேரூர் பேரூராட்சி 7 வது வார்டிற்குட்பட்டது எம்.ஜி.ஆர் நகர்.
வளர்ந்து வரும் இப்பகுதியில் சுமார் 350த்திற்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் நகர் செல்லும் சாலையில்
இடையே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலமானது கடந்த 6 மாதங்களுக்கு  முன்பு கனரக வாகனம் இவ்வழியே செல்லும் போது பழுதானது. சிறிய அளவில் உருவான பள்ளமானது. தற்போது மெகா பள்ளமாக காட்சியளிக்கிறது. இவ்வழியே  இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் உள்ளே செல்ல வேறு   பாதை இல்லாததால் இத்தரைப்பாலம் எப்போது உடைந்து விழுமே என்ற அச்சத்துடனே
சென்று வருகின்றனர். மேலும் நடந்து, சைகிளில் செல்பவர்கள் பள்ளம்
அறியாமல் அவ்வப்போது உள்ளே விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து
அப்பகுதி மக்கள் புகாரளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள்  குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த  தரைப்பாலம் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. உறுதியற்ற
தன்மையில் இந்த பாலம் அமைக்கப்பட்டமையால் இது போன்ற சிறு வாகனங்களுக்கே  உடைந்து விடுகிறது. மேலும் இந்த வழித்தடங்களில் சாலை விளக்கு இரவு  நேரங்களில் முறையாக எரியாததால் இரவு நேரங்களில் விபத்துக்கள் நடந்த  வண்ணம் உள்ளது. இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்மந்தபட்ட நிர்வாகிகள் உடனடியாக இந்த
தரைப்பாளைத்தை சீரமைத்துத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments