Disqus Shortname

காக்கநல்லூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

உத்திரமேரூர் செப், 17
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லூர் கிராமத்தில் நேற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் பன்னாட்டு அரிமா சங்க மாவட்ட தலைவர் லயன் டி.கே.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 69 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 14 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 55 மனுக்கள் நிலுவை உள்ளது. நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேவராஜன் நன்றி கூறினார். இதேப் போல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் அடுத்த அகரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்  தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத் தலைவர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம் தென்னேரி என்.எம்.வரதராஜீலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜாபாத் வாட்டாட்சியர் கீதாலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 67, மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 03 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 31 மனுக்கள் நிலுவை உள்ளது, 33 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments