Disqus Shortname

உத்திரமேரூர் பாலசுப்பரமணியர் ஆலயத்தில் தேமுதிக சார்பில் வெள்ளி தேர் இழுத்தனர்

உத்திரமேரூர் செப், 01

உத்திரமேரூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலசுப்பரமணியர் ஆலயத்தில்
உத்திரமேரூர் ஒன்றிய, நகர தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளித் தேர் இழுத்து சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியில் மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் இராஜேந்திரநாதன் தலைமையில் காஞ்சி தெற்கு மாவட்ட பொருப்பாளர் இராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அழிசூர்கன்னியப்பன் உட்பட நிர்வாகிகள் தேரினை இழுத்தவாறு கோவிலை வளம் வந்து வழிபட்டனர். முன்னதாக பாலசுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார், வெங்கடேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments