Disqus Shortname

ஸ்ரீஎட்டியம்மன் ஆலய ஆண்டுத் திருவிழா

உத்திரமேரூர் செப், 03
உத்திரமேரூர் அடுத்த ஆதவப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயம்   ஸ்ரீஎட்டியம்மன் ஆலயம், இங்கு ஆவணி மாத ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக
கொண்டாடப்பட்டது.  விழாவையொட்டி பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.  காப்பு கட்டிய பக்தர்கள் விரதமிருந்த பக்தர்கள் அம்மனுக்கு பால்குட  அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக  அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் கோவில் வளாகத்தில் பக்தர்கள்  பொங்கலிட்டு கூழ் ஊற்றியும் நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். விழாவில்   கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு  அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு சிம்ம  வாகனத்தில் அம்மன் வானவேடிக்கைகளுடன் தார தப்பட்டைகள் முழுங்க வீதியுலா
வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை
விமலாபிரகாசம், ராமன் விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக
செய்திருந்தினர். இரவு கோவில் வளாகத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சி
நடந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்காக
சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments