Disqus Shortname

உத்திரமேரூரில் துணிகரம் ஒரே இரவில் 3 கடைகளில் திருட்டு வியாபாரிகள் பீதி

உத்திரமேரூர் செப் 11 : 
உத்திரமேரூரில், ஒரே இரவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். 
 பூட்டு உடைத்து திருட்டு


மறைமலைநகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (40). உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் சொந்தமாக ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார்.
(10-10-2016 இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.  (11-10-2016)காலை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம ஆசாமிகள் கடைக்குள் நுழைந்து கல்லாப்பெட்டியை உடைத்துள்ளனர். பணம் இல்லாததால், அங்கு நிறுத்தி இருந்த பைக்கை திருடி சென்றது தெரிய வந்தது. 
இரண்டாவது சம்பவம்: 

உத்திரமேரூரை சேர்ந்தவர் சண்முகராஜன் (40). செங்கல்பட்டு சாலையில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். 

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியை உடைத்து ரூ.15 ஆயிரம் பணம், சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிய வந்தது.

3வது சம்பவம்: 

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா (45). செங்கல்பட்டு சாலையில் பைக் ஷோரூம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஷோரூமை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, சிசிடிவி கேமரா, ஹார்டு டிஸ்க், லேப்டாப் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 

இந்த 3 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கடைகளில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், ‘‘உத்திரமேரூரில் மிகவும் முக்கியமான பகுதி இது. ஆனாலும், கொள்ளையர்கள் 3 கடைகளில் கைவரிசையை காட்டி உள்ளனர். 

போலீசார் இந்த பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபடாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். இப்படி இருந்தால், நாங்கள் எப்படி தொழில் செய்வது? எங்களது, நஷ்டத்திற்கு யார் பொறுப்பேற்பது? போலீசார் தங்களது பணியை சரியாக செய்யாமல் அலட்சியமாக இருப்பதால், கடையை பூட்டிவிட்டு செல்லும் நாங்கள் நிம்மதியாக இரவை கழிக்க முடியவில்லை’’ என்றனர்.

No comments