Disqus Shortname

உத்திரமேரூரில் ஏ.டி.எம்.மில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார் அவரிடமிருந்து ரூ.9,500 பணம் மீட்பு

உத்திரமேரூர் : 28-12-2018
உத்திரமேரூர் அடுத்த வெள்ளபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் 45
விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் செங்குந்த
பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க
சென்றுள்ளார். அந்த ஏ.டி.எம்மில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் தனது
கார்டில் பணம் காட்டவில்லை. உங்களது கார்டை கொடுங்கள் செக் செய்து
பார்கிறேன் என்றார். அதை நம்பிய ரமேஷ் தனது கார்டினை அவரிடம்
கொடுத்து ரகசிய எண்ணை கூறியுள்ளார். உடனே அந்த மர்ம நபர் உங்கள்
கார்டிலும் பணம் காட்டவில்லை. என்று கார்டை ரமேஷிடம் திருப்பி
கொடுத்துவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். சில
நொடிகளில் ரமேஷின் செல்லுக்கு ரூ.9,500 பணம் எடுத்துள்ளதாக
குருந்தகவல் வந்தது. அதிர்ந்து போன ரமேஷ் தனது கார்டை செக் செய்ய
எடுத்த போது கார்டை மர்ம நபர் மாற்றி கொடுத்துவிட்டு போனது
தெரியவந்தது. இதையடுத்து எந்த ஏடிஎம் இல் பணம் எடுத்துள்ளார் என்று
தேடிச்சென்றுள்ளார். எங்கும் மர்ம நபர் இல்லாததால் மனமுடைந்த ரமேஷ்
தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்கு பங்கிற்கு
சென்றபோது அங்கு அந்த மர்ம நபர் இருப்பதை கண்டு அவரை
விரட்டிபிடித்தார். பின்னர் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல்
அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த உத்திரமேரூர் போலீசார் மர்ம
நபரை பிடித்து விசாரித்ததில் அவர் காவாம்பயிர் கிராமத்தை சேர்ந்த
பார்த்திபன் 36 என்பதும் கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். திருட்டில்
தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த
ரூ.9.500 பணத்தினை மீட்டு பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில்
அடைத்தனர்.

No comments