Disqus Shortname

சிறப்பு மருத்துவ முகாம்

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தூய்மை காவலர்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைப்பெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் பால்ஏசுதாஸ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் சர்க்கரை நோய், உப்பு பரிசோதனை, அறுவை சிகிச்சை பரிசோதனை, இருதய நோய், காது, மூக்கு, தொண்டை, தோல் சிகிச்சை, குழந்தை மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவம், எலும்பு சிகிச்சை, சித்தமருத்துவம் பொது மருத்துவம் போன்ற பல்வேறு வகையிலான நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பெற்ற அனைவருக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 26 நபர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments