Disqus Shortname

மீனாட்சி மருத்துவக்கல்லூரியின் சிறப்பு மருத்துவ முகாம்

உத்திரமேரூர் மார்ச்.27
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தீட்டாளம் கிராமத்தில்  காஞ்சி மீனாட்சி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், உத்தரமேரூர் கனரா வங்கியும் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம்  நடைப்பெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்விசெபாஸ்டின் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சத்தியபாமாஆதிகேசவன், முன்னாள் தலைவர் வரலட்சுமி முன்னிலை வகித்தார். மீனாட்சி மருததுவமனை மருத்துவ அலுவலக மருத்துவர் சி.சுப்பரமணியன் அனைவரையும் வரவேற்றனர், உத்திரமேரூர் கனரா வங்கி மேலாளர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் தீட்டாளம், கோழியாளம், பாப்பநல்லூர், வைப்பனை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 767 பேர் சிகிச்சை பெற்றனர். இம்முாகமில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை  பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை உட்பட பல்வேறு வகைகளில் சிகிச்சை அளித்து தேவையானவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 21 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மருந்தீயல் துறைத் தலைவர் கோகிலா, மீனாட்சி மருத்துவ கல்லூரி மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி வெங்கடேசன் மீனாட்சி மருத்துவ கல்லூரி செவிலியர்கள், சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர் இதில்   கிராம மக்கள் பலர் கலந்து கொண்டுபயன்பெற்றனர்.

No comments