Disqus Shortname

உத்திரமேரூரில் மயானக்கொள்ளை திருவிழா திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

உத்திரமேரூர் மார்ச்,09

உத்திரமேரூரில் ஸ்ரீ.அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய உற்சவம் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவ அங்காளபரமேஸ்வரி அம்மன் புஷ்ப விமான பல்லக்கில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடந்தது. முன்னதாக பூங்கரகம், சக்திகரகம், அக்னிகரகம், மேளக்கச்சேரி,சிலம்பாட்டம், கரகாட்டம், விளயான்டிமேளம், மங்களவாத்தியத்துடன் திருவீதி உலாவில்  பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் முடிந்தப்பின் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா புறப்பட்டார். அம்மனுக்கு நேர்த்தி கடன் செய்ய 7  நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் 8-ம்
நாள்ளான நேற்று எலுமிச்சப்பழங்களை  தங்களது உடல் முழுவதும் குத்திக்கொண்டும், முதுகில் அலகுகுத்தி கார்,
வேன் டிராக்டர்கள்,உரல்கள்     கட்டையாட்டம்,  ராட்சத கிரேனில் தொங்கியவாறு     இழுத்தும் ஊர்வலமாக சென்றனர்
டிராக்டரில் அந்தரத்தில் தொங்கியபடியும் காளி வேடமிட்டும், முக்கிய
வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து மயானத்தை சென்றடைந்தனர். அம்மனுக்கு பக்தர்கள் காய்கறிகள், பழங்கள் விளைபொருட்களை மயானத்தில் அம்மனிடம் செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பொது மக்கள் எலுமிச்சப்பழம் மாலை
அணிவித்து அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை  விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இரவு ஆலய வாயிலில் தெருக்கூத்து நடந்தது..  விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


No comments