Disqus Shortname

பருவ நிலை மாற்றம் தடுக்கும் விதமாக மரம் நடு விழா

உத்திரமேரூர் மார்ச், 26
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆதவப்பாக்கம் கிராமத்தில் குழந்தைகள் கண்காணிப்பகம் நிறுவனம் சார்பில் பருவநிலை மாற்றத்தை தடுப்பது மற்றும் புவி வெப்பமாதலை தடுப்பது குளித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் சிறு குறு விவாசயித்தில் ஈடுபடும் விவாசயிகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காடு வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பின் மூலம் எவ்வாறு புவி வெப்பமாதலை தடுக்க முடியும் என்பது குறித்தும் பருவநிலை மாற்றத்தை தடுப்பு குறித்தும் கருத்தரங்கில் பேசப்பட்டது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட 300 பெண்களுக்கு நெல்லி, கொய்யா, தேங்கு, எலுமிச்சை ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டு முக்கிய இடங்களில் நடப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆதவப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்  பி.விமலா தலைமை தாங்கினார். சர்வோ அறக்கட்டளை நிர்வாகி கலைச்செல்வி வரவேற்றார். குழந்தைகள் கண்காணிப்பு நிறுவன இயக்குநர் து.ராஜ் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஊராட்சி செயலாளர் சங்கர் சமூக ஆர்வலர் ஸ்டெலா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைகள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ந,யசோதா நன்றி கூறினார்.

No comments