Disqus Shortname

உத்திரமேரூரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உத்திரமேரூர் மார்ச், 24

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்
விழிப்புணர்வு நிகழ்ச்சி உத்திரமேரூரில் நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர்
சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர் பேரூந்து நிலையம் பேரூராட்சி
அலுவலக வளாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடமாடும் காணொலி மூலம் குறும்படங்கள், சுவர்ரொட்டி விளம்பரங்கள், துண்டுபிரசுரங்கள் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்ப்படுத்தும் வகையில் வாக்காளர் பட்டியலில் அனைவரும் பெயர் சேர்த்தல்,100 சதவீதம் வாக்குப் பதிவு செய்தல், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், வாக்களிக்க கையூட்டு பெறுவதைத் தவிர்த்தல், வாக்காளர்கள் பூத் மற்றும் அவ்வப்போது பூத் நிகழ்வுகளை அறிய எஸ்,எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளுதல், வண்ணவாக்காளர் அடையாள அட்டை பெருவது, வாக்காளர்கள் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவது  உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் உத்திரமேரூர் பஜார்
வீதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு
துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்
உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பவணந்தி தலைமை  தாங்கினார். தேர்தல் நடத்தும் துணை அலுவலர்கள் மணிமாறன், சாந்தி, செயல்  அலுவலர் கமல்ராஜ், துணை வட்டாட்சியர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் உதவியாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments