Disqus Shortname

அம்மா ஆரோக்கிய திட்டம்

உத்திரமேரூர் மார்ச் 07
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திடடம் துவங்கியது. மானாம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்ட 74 பேருக்கு உயரம், எடை சரிபாத்தல், இரத்த அழுத்தம், சிறுநீர், இரத்தம் பரிசோதனை செய்தல், இ.சி,ஜி,ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அம்மா ஆரோக்கிய திட்டம் ஆனது வாரத்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்னும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு மானாம்பதி வட்டார மருந்துவ அலுவலர் ஆர்.உமாதேவி கூறினார். இம்முகாமில் காஞ்சிபுரம் சுகாதார மாவட்ட துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் சீனுவாசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.