Disqus Shortname

உத்திரமேரூர்அரசு கல்லுாரியில் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்ததால் மாணவ-மாணவியர்கள் முற்றுகை போராட்டம்

உத்திரமேரூர் ஜீன்,02

உத்தரமேரூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வெளிநடப்பு, முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
உத்திரமேரூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இக்கல்லுாரியில் 2013, 14, 15 ஆகிய மூன்று  ஆண்டுகளில் காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்திரமேரூர், மேல்மருவத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 750 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு இளநிலைதமிழ், இளநிலை ஆங்கிலம், இளநிலைவணிகம், இளநிலை கணிதம், இளநிலை கணினிஅறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. கல்லூரியில் பேராசிரியர்கள் சுமார் 30 பேர் வேலை செய்ய வேண்டும். ஆனால் கௌரவ விரிவுயாளர்கள் 5 பேர் நிரந்தரப்பணியாளர்கள் 1 உட்பட 6 பேராசிரியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர். இதில் நேற்று  கௌரவ விரிவுயாளர்களாக பணியாற்றிய 2 பேரை பணி நீக்கம் செய்ய போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதை அறிந்த கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ மாணவியரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில்
மாணவ-மாணவியர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்ப்பட்டது. போராட்டத்தின் போது மாணவர்கள் கூறுகையில் எங்களுக்கு
ஏற்கனவே கணினி, ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களே இது வரையில் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் இது போன்று பணிபுரியும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வதால். எங்களின் கல்வி கேல்விக்குறியாக உள்ளது. எனவே பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தி காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, மாணவ, மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments