Disqus Shortname

தனிநபர் இல்ல கழிவறை அமைத்திட 188பேருக்கு 9.40 லட்சம் முன் பணம்

உத்திரமேரூர் ஜீலை 11

உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 73 ஊராட்சிகளிலும் தூய்மை பாரத இயக்க  திட்டத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிவறை அமைத்திட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஊராட்சிகளில் மொத்தம் 2112 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு பணி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு கழிவறை கட்ட முதல்கட்ட முன்பணமாக புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஒரு பயணாளிக்கு ரூ.5000 வீதம் 188 பயணாளிகளுக்கு  ரூ.2.40 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்  பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா முன்னிலை வகித்தார். புதுவாழ்வு திட்ட அணித்தலைவர்கள் மணிகண்டன், லட்சுமணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். தூய்மை பாரத இயக்க திட்ட
வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலந்து கொண்டு கிராம புறங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து வீட்டிற்கு ஒரு தனிக் கழிப்பறை
அமைத்திட அரசின் இந்த திட்டத்தினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கழிவறைக்கு மூன்று அடி ஆழத்தில் இரண்டு உரகுழிகள் அமைக்க வேண்டும். உட்பட  கழிப்பறை கட்டும் முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியில் சமூக வல்லூனர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சுகாதார தூதுவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments