Disqus Shortname

உத்திரமேரூர் அருகே 30 கொத்தடிமைகள் மீட்பு

உத்திரமேரூர் ஜீலை 13:
உத்தரமேரூர் அருகே 30 கொத்தடிமைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.
உத்தரமேரூர் அருகே மேனலூர், பாரதிபுரம் பகுதியில் கொத்தடிமைகள் உள்ளதாக தேசிய ஆதிவாசி தோழமைக் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் கன்னியப்பன், ராணி ஆகியோர் கொத்தடிமைகள் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் சிவருத்ரய்யா, உத்தரமேரூர் வட்டாட்சியர் ஹரிதாஸ், காவல் ஆய்வாளர் மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடங்களுக்குச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு மதுராந்தகம் வட்டம், தீட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆண்கள், 10 பெண்கள், 8 குழந்தைகள் என மொத்தம் 30 பேர் கொத்தடிமைத் தொழிலாளர்களாக உள்ளதும், அவர்களை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இரும்பேடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மரம் வெட்டுவதற்காக அழைத்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோட்டாட்சியர் சிவருத்ரய்யா தலைமையிலான அதிகாரிகள் 30 பேரையும் மீட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments