Disqus Shortname

பட்டா மாற்றம் செய்யாததை கண்டித்து அரை நிர்வானப் போராட்டம்

உத்திரமேரூர் ஜீலை 13
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பட்டா வழங்கி 17 ஆண்டுகளாகியும் 100க்கும் மேற்பட்டோருக்கு இதுநாள் வரை பட்டா பெயர்
மாற்றம் செய்யப்படததை கண்டித்து அரை நிர்வாணப் போராட்டம் தாலுக்கா
அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்
சார்பில் நேற்று நடந்தது, போராட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை
விழிப்புணர்வு சங்க தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார்.
மாயகிருஷ்ணன், மனோகரன், தவனகிரி, இரா.நாகன், ஞானசேகரன், பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உத்திரமேரூர்
ஒன்றியத்திற்குட்பட்ட புலிவாய், மருதம், காவனூர்புதுச்சேரி, விசூர்
உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 1998 முதல் பட்டா வழங்கியும் இது நாள் வரை  பெயர் மாற்றம் செய்யப்படாததை கண்டித்து 150க்கும் மேற்பட்டோர்
உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மேல் சட்டைகளை கழற்றி அரை
நிர்வாணப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும்  தாலுக்கா நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர்  தசில்தார் ஹரிதாஸிடம் 150த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர்.மனுக்களை பெற்ற தாசில்தார் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக  கூறினார். எனவே போராட்டம் கைவிடப் பட்டது. இது குறித்து
பொது மக்கள் கூறுகையில் – 1998 முதல் பட்டா வழங்கிய நாள் முதல் ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தும் இதுவரை பட்டா மாற்றம் செய்யப்படவில்லை  எனவே நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்

No comments